Total Pageviews

Friday, January 26, 2018
குடியரசு தின வாழ்த்துக்கள் 

Monday, January 22, 2018
 ஒப்பந்த ஊழியர்களின் ஓயாத பிரச்சினைகளை

அகில இந்தியத்தலைவர்

தோழர்.ஆசிக் அகமது அவர்களும்

அகில இந்தியப் பொதுச்செயலர் 

தோழர்.மதிவாணன் அவர்களும்

 தொழிலாளர் நல அமைச்சர் திரு.கங்குவார் 

அவர்களிடமும்... முதன்மைத் தொழிலாளர் ஆணையர்  

திரு.அனில்குமார் நாயக் அவர்களிடமும்…  

19/01/2018   அன்று  தலைநகர் டெல்லியில் சந்தித்து 

விரிவாக எடுத்துரைத்துள்ளனர்


உரிய தேதியில் சம்பளம் இல்லை

உழைப்புக்கேற்ற ஊதிய இல்லை

அடையாள அட்டை இல்லை

ஆண்டுதோறும்  போனஸ் இல்லை

மருத்துவ வசதி இல்லை

மரித்து விட்டால் இழப்பீடில்லை

வாரத்தில் ஓய்வில்லை….

வைப்புநிதியில் நிறைவில்லை….

மொத்தத்தில் மனிதநேயம்

என்பதே  BSNLலில் இல்லை

என்பதை நமது தலைவர்கள் நேர்பட எடுத்துரைத்து


எழுத்துப்பூர்வ கடிதமும் கொடுத்துள்ளனர்….

Saturday, January 13, 2018மகிழ்ச்சி பொங்கட்டும்
 வாழ்வில் இன்பம்
 பெருகட்டும்

அனைவருக்கும்
இனிய பொங்கல்
நல் வாழ்த்துக்கள்Tuesday, January 09, 2018

08/01/2018 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து 

சங்கக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


30/01/2018 அன்று அண்ணல் காந்தி மறைவு தினத்தில் அவரது 

 சமாதியில் அனைத்து சங்கத்தலைவர்கள் அஞ்சலி.

அதன் பின் 5 நாட்கள் தொடர் சத்தியாக்கிரகம்.

30/01/2018 முதல் நாடு முழுக்க அண்ணல் காந்தி வழியில்

விதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்கம்....

28/02/2018 அன்று டெல்லி சஞ்சார் பவன் நோக்கி

மாபெரும் முற்றுகைப் போராட்டம்.

ஒரு வார காலத்திற்குள் மந்திரியை சந்தித்து மனு கொடுத்தல்.

அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும்

சந்தித்து ஆதரவு கோருதல்.

செல் கோபுரம் துணை நிறுவன உருவாக்கம்  எதிர்த்து

சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

கோரிக்கைகள்

01/01/2017 முதல் BSNL  ஊழியர்களுக்கு

15 சத ஊதிய மாற்றம் அமுல்படுத்துதல்

இரண்டாவது ஊதிய மாற்ற இழப்புக்களை சரிசெய்தல்

01/01/2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்தல்….

செல்கோபுரம் துணை நிறுவன

உருவாக்கத்தை அரசு கைவிடுதல்

ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆகக் குறைப்பதையோ 

விருப்ப ஓய்வுத்திட்டத்தை கட்டாயமாக 

அமுல்படுத்துதலையோ தவிர்த்தல்


தோழர்களே….

நமது தேசத்தந்தை உயிர் நீத்த நாளில்

நாம்  உயிர்த்தெழுவோம் ஒன்றாய்….

இறுதிக்கட்டப் போராட்டத்தை...

உறுதியாகஅமைதியாக நடத்திடுவோம்

ஊழியர் நலன்நிறுவன நலன்


இணைந்தே காத்திடுவோம்

Monday, January 08, 2018

தொடரும் போராட்டம்…
செல் கோபுரம் தனி நிறுவனம் எதிர்த்து
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக
08/01/2018 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்.
(மறுபடியும் முதலில் இருந்து...) 

Friday, January 05, 2018


தோழர் .ஓம் பிரகாஷ் குப்தா.

 காலத்தால் அழியாத காவியத்தலைவன் 
5 ஆம் ஆண்டு நினைவு நாள்  06.01.2018
( 08.04.1922 -  06.01.2013 )
RTP களை நிரந்தர பணியில் அமர்த்திய இமயமே! 

மஸ்துர்களின் வாழ்வில் ஒளியேற்றிய  பேரொளியே ! 

மாற்றங்களை தனக்கு சாதகமாக மாற்றிய மாசற்றவனே !

மிலாத்துயர்களை மீட்டெடுத்த அடிமட்ட ஊழியர்களின்  கருணை கண்ணே !

உழைக்கும் தொழிலாளிக்காக தன்னையே அற்பணித்தவனே !

தபால் தந்தி இயக்கத்தில் தன்னிகரில்லா தலைவனே !

தொலைதொடர்பு துறையின் சரித்திர நாயகனே !

போர்குணத்தை கற்றுத்தந்த போராளியே !

எங்கள் உள்ளத்திலும் நினைவிலும் 

என்றும் நிலைத்து இருக்கும் 

ஒப்பற்ற மாபெரும் தலைவனே ! 

உன் புகழ் ஓங்குக...... 

Monday, January 01, 2018


         


அனைவருக்கும்

னி ங்கிப்புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்.


NFTE -NFTCL

மாவட்ட சங்கங்கள்