Total Pageviews

Sunday, May 28, 2017

கவன ஈர்ப்பு நாள்

BSNL ஊழியர்களுக்கு உடனடியாக
ஊதியமாற்றக்குழு அமைக்க..
DPE ழிகாட்டுதல் வெளியிடக்கோரி…

லாபம் நட்டம் பாராமல்.. 
15 சத ஊதிய உயர்வை வழங்கக்கோரி…

BSNL தொழிற்சங்கங்களின் 
தேசிய கூட்டமைப்பு சார்பாக

14/06/2017  நாடு தழுவிய
கவன ஈர்ப்பு நாள்

தோழர்களே… அணி திரள்வீர்….

Wednesday, May 17, 2017

தோழர் ஜெகன் பிறந்தநாள்-மே 17


சகிப்புத்தன்மையின் அடையாளம்
தன்னகந்தை (ஈகோ) எள்ளளவும் இல்லாதவர்
தபால் தந்தி தொலைத்தொடர்பு தொழிலாளர்
இயக்கத்தின் தலைவன் வழிநடப்போம்

Tuesday, May 16, 2017

செயற்குழு முடிவுகள்     

தோழர் ராஜேந்திரன் தலைமையேற்க
தோழர் சிவகுருநாதன் வரவேற்ப்பு நல்க
செயற்குழு சிறப்பாய் தொடங்கியது  
 மறைந்த தோழர் வி .கே . பரமசிவம் அவர்களுக்கு
செயற்குழு அஞ்சலி செலுத்தியது 

கூட்டம், கும்பமேளா என்றில்லாமல்
மாவட்டசங்க பொறுப்பாளர்கள், கிளைச்செயலர்கள் 
இன்னாள், மேனாள் மாநிலச்சங்கப் பொறுப்பாளர்கள்
முன்னணி தோழர்கள் தோழியர்கள் பங்கேற்று 
ஆய்படுபொருள்மீது கருத்துக்களை முன்வைத்தனர் 
 எடுக்கப்பட்டமுடிவுகள்  
* மாவட்டமாநாட்டை ஜூலை 8 அன்று மதுரையில் நடத்துவது 
* உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் குறைந்த பட்சம் 200 ரூபாய் நன்கொடை  பெறுவது 
* மாநிலச்செயலர் தோழர் நடராசன், அகிலஇந்தியச் செயலர் தோழர்      செயராமன் -  சிறப்பு அழைப்பாளர்கள் 
* அருகாமை மாவட்ட செயலர்கள், மாநிலச்சங்க பொறுப்பாளர்களை 
    வாழ்த்திட அழைப்பது 
* மாவட்ட அளவிலான பிரச்சினைகளை தொகுத்து பொதுமேலாளர் அவர்களிடம் பேசுவது 
* குறிப்பாக திண்டுக்கல் உள்ளூர் விருப்ப மாற்றல், மதுரை சி.எஸ்.சி இல் மாற்றல் உத்தரவுகளை வெளியிட வற்புறுத்துவது 
* ஒட்டன்சத்திரம் குருப்ஸ் துணைகோட்டப்பொறியாளர், வத்தலக்குண்டு போன்ஸ் துணைகோட்டப்பொறியாளர் ஆகியோரின் ஊழியர் விரோத, பாரபட்ச போக்கை மாற்றிட வலியுறுத்துவது  
* தேவை எனில் போராட்டம் நடத்துவது
மாவட்ட பொருளர் தோழர் செந்தில் நன்றிகூறி உத்வேகத்தோடு செயற்குழுவை நிறைவு செய்தார் 
     

Monday, May 15, 2017

மாவட்டச்செயற்குழு     

 தலைமை : தோழர் G. ராஜேந்திரன், மாவட்டத்தலைவர் 
இடம் : மதுரை - தல்லாகுளம் 
அரங்கம் : சி.எஸ்.சி( CSC ) - மனமகிழ் மன்றஅறை 
நாள் : 16.05.2017, செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 10 மணி 
ஆய்படு பொருள் :  
1. மாவட்ட மாநாடு
2. கிளைமாநாடுகள்
3. நிதிநிலை
4. அமைப்புநிலை
5. இன்னபிற

மாவட்டச்சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்தநேரத்தில் கலந்துகொள்ளவும்.  

தோழமையுடன் 
சிவகுருநாதன் 
மாவட்டச்செயலர் 

Saturday, May 13, 2017

NFTE சங்கம் ...பிரதமருக்கு கடிதம் ....


Image result for writing a letter images
மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு ...
1.1.2017 முதல் ஊழியர்களுக்கான புதிய ஊதியம் வழங்கப்படவேண்டும் .பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வை ஊழியர்கள் எதிர்பாத்து இருக்கிறார்கள் .மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு பெற்ற சூழலில் .
இது குறித்த கவலையுடன் DPE வழிகாட்டுதல் கோரி நிறைய கோரிக்கை மனு தந்துள்ளோம் .ஊதிய உயர்வுக்கான காலங்கள் கடந்த சூழலில் DPE  இதை ஒரு பொருட்டாகவே கருதாமல் ஊழியரை ஏமாற்றும் சூழலில் தங்கள் தலையீட்டை கோருகிறோம் .

இந்த சூழலில் இரண்டாவது அங்கீகார சங்கமான NFTE சங்கம் ,BSNL நிறுவனத்திடம் ஊதிய உயர்வுக்கு வலியுறுத்திய சூழலில் ...BSNL நிறுவனம் DPE வழிகாட்டுதல் இல்லாமல் தன்னால் ஊதிய உயர்வு குறித்து ஏதும் செய்ய இயலாது என சொல்கிறது .

எனவே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு DPE வழி காட்டலையும் ,அதிகாரிகளின் ஊதிய உயர்வுக்கு கேபினட் ஒப்புதலையும் வழங்கிட கேட்டுக்கொள்கிறோம் .

Monday, May 08, 2017

கிளை ஆண்டுவிழாக்கள்   

மதுரை தெற்கு கிளை: 
          ஆண்டு விழா 24.04.2017 அன்று நடைபெற்றது. தோழர்கள் சிவகுருநாதன் மாவட்டசெயலர், ராஜேந்திரன் மாவட்டத்தலைவர், செந்தில் மாவட்டப்பொருளார் மற்றும் எஸ். ராஜேந்திரன் மாவட்ட மேனாள் செயலர் பங்கேற்று உரைநிகழ்த்தினர். 
தோழர்கள் 
C.  பாலாஜி AOS - தலைவராகவும் 
M. ராஜா TT - செயலராகவும் 
G. சங்கிலி TT - பொருளராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
கிளைச்செயலர் தோழர் கஜமொய்தீன் தான் ஓய்வுபெறுமுன் 
கிளையாண்டு விழவை நடத்திக்கொடுக்க வேண்டுமென்ற கடமையுணர்வோடு செயல்பட்டது பாராட்டிற்குரியது. 
திருமங்கலம் கிளை:     
ஆண்டு விழா 04.05.2017 அன்று நடைபெற்றது. தோழர்கள் சிவகுருநாதன் மாவட்டசெயலர், ராஜேந்திரன் மாவட்டசெயலர் ( பொறுப்பு), தோழியர்கள்  கலாவதி மாவட்டத்தலைவர், பரிமளம் மாநில துணைத்தலைவர் மற்றும் மூத்த தோழர் வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்று உரைநிகழ்த்தினர். கிளைசெயலர்கள் தோழர்கள்  ஆறுமுகம்( சி.எஸ்.சி ), சந்திரசேகர்
( திருப்பாலை ) உதயகுமார் (திருநகர்) ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். 
தோழர்கள் 
V. சுந்தரராஜன் TT - தலைவராகவும் 
S. பத்மநாபன் JE - செயலராகவும் 
S.T.N ஆதீஸ்வரன்  ATT - பொருளராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.   

   


Thursday, May 04, 2017

Image result for karl marx images காரல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள்   

மனிதகுலத்தின்  நீண்டநெடிய வாழ்க்கை போராட்டம்  
தோழர் காரல் மார்க்ஸ்ஸை உருவாக்கியது 
1818 மே 5ம் நாள் ட்ரியர் ( Trier) நகரத்தில் பிறந்தார் 
பல்கலைக்கழக கல்வி முடித்து முனைவர் பட்டம் பெற்றார் 
ஜெர்மனியில் நிலவிய தத்துவார்த்த விவாத சூழலால் ஈர்க்கப்பட்டு 
கெகலின் தத்துவங்களில் ஆர்வம் காட்டத்தொடங்கினார் 
பத்திரிக்கை ஆசிரியரானார்
தத்துவம் , அரசியல், பொருளாதாரம் 
என அனைத்தைப்பற்றியும் எழுதினார்
தத்துவார்த்த, பொருளாதார விவாதத்தில் இயக்கவியலை  நிரூபித்தார் 
ஆளும்வர்க்கங்களுக்கு, அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என 
நாடுகடத்தப்பட்டார். குடியுரிமை பறிக்கப்பட்டது 
பாரிஸ் சென்றார்.
உற்ற தோழனான ஏங்கெல்ஸை சந்தித்தார் 
இருவரும் முயன்று கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோவை வெளியிட்டனர் 
ஆளும்வர்க்கங்கள் அலரட்டும் என அறைகூவல் விடுத்தனர்  
தொழிலாளர் அமைப்புக்களோடு சேர்ந்து செயல்பட்டார் 
அங்கிருந்தும் நாடுகடத்தப்பட்டார் மார்க்ஸ் 
லண்டனில் குடியேறினார் 
கடுமையான உழைப்பிற்கும், நீண்டநெடிய ஆய்விற்குப்பின் 
மூலதனம் (டாஸ் கேப்பிடல்)  வெளியிடப்பட்டது 
முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி
உற்பத்திசாதனங்களின் வளர்ச்சி 
முதலாளி - தொழிலாளி உறவுகள், கூலி 
சுரண்டல் 
உபரி உற்பத்தி - லாபம் 
முதலாளித்துவத்தின் வீழ்ச்சி
சோசலிசத்தின் எழுச்சி  
அனைத்தையும் அறிவியல் விதிகளின் 
அடிப்படையில் விளக்கி, நிரூபித்துக்காட்டினார் 
மூலதனம் (டாஸ் கேப்பிடல்) பொருளாதார ஆய்விலும் 
வர்க்க அரசியலிலும் பெரும் புரட்சியை உருவாக்கியது 
வரலாற்றை தலைகீழாய் புரட்டிபோட்டது 
மார்க்ஸும் ஏங்கெல்சும் 
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் 
வரலாற்று  பொருள்முதல்வாதத்தையும் 
செழுமைப்படுத்தி 
உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான 
வெல்லற்கரிய ஆயுதமாய் உருவாக்கினர் 
மார்க்சியம் பிறந்தது;அது  
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்திடும்
வளர்ந்திடும்  
சொல்லிலடங்கா துயரத்தையும், வறுமையையும் 
எதிர்கொண்டு லட்சியவாழ்க்கை வாழ்ந்து 
உழைக்கும் வர்க்கத்தின் 
விடுதலைக்கு வித்திட்ட 
ஆயிரம் ஆண்டின் மாமேதை
காரல் மார்க்ஸின் 
சிந்தனைகளை போற்றுவோம் 
நம் வாழ்வில் 
கடைபிடிக்க முயற்சிப்போம்