Total Pageviews

Monday, April 30, 2018




மே தின வாழ்த்துக்கள்

உழைக்கும் கரங்கள்உயரட்டும்

உழைப்பவர் வாழ்வு மலரட்டும்

தடைகளை அகற்றிடுவோம்

தலைகளை நிமிர்த்திடுவோம்...

அனைவருக்கும்

புரட்சிகர...

மேதின நல்வாழ்த்துக்கள்.
                            

  நமது முதன்மை பொதுமேலாளர் அலுவலக கிளையின் 

மேதின கொடியேற்றம் : 

01.05.2018 

காலை 11.00 மணிக்கு நடைபெறும்

தலைமை            :    தோழர்.  G.போஸ், CANNER


கொடியேற்றம்                  :    தோழர்.    A.விஸ்வநாதன், TT


சிறப்புரை                             :       தோழியர். P.F மதினா யாஸ்மின், OS


தோழர்கள், தோழியர்கள், 

அனைவரும் வருக..... வருக...... சிறப்பத்தருக......


மேநாள்
வர்க்கமாய் உணர்தலே
உயர்திணை
ஏதோ, வாழ்ந்தோம் என்பது
அஃறிணை.
சங்கமாய் திரள்வதே சரிநிலை
வெறும் சந்ததிப்பெருக்குதல் உயிர்ப்பிழை.
பலரும் போராடி பெற்றதுன் பயன்நிலை
போராடும் வர்க்கத்துடன் சேராதிருப்பது இழிநிலை
ஈழமோ, காசுமீரோ
இந்திய மேலாதிக்கக் கொடுங்கொலை
சிக்காகோவோ, சிங்கூரோ
உரிமைக் கேட்டால் படுகொலை
நமைச்சுற்றி பகை வர்க்கம்
உலகெங்கும் ஓர் இழை,
அரசியல் வேண்டாமென்பது சதி வலை,
அறுத்தெறிந்து! அமைப்பாகு தொழிலாளியே,
மே நாள் அழைக்கிறது!
வர்க்கப் போராட்டமே உன் வாழ்நிலை.
பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர் பயமில்லை!
எதற்கெடுத்தாலும், “எனக்கு நேரமில்லை
இந்தப் புரட்சிஇயக்கமெல்லாம் பழக்கமில்லை
கொடி பிடித்தல்கோஷமிடுதல் ஒத்து வராது
கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது
என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து
மேலும் சிவக்குது மே நாள்!
கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும், விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்,
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி,
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு!
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்!
உணவுக் கூடத்திலும்
உளவுபார்க்கும் கேமரா,
வார்த்தையை பிடுங்கி
உனது வர்க்க உணர்வை சோதிக்கும் சூப்பர்வைசர்,
கட்டளைக்கு எதிராக இமைத்தாலே
பணிநீக்கும் அதிகாரம்,
புரையேறினாலும்
சக தொழிலாளியிடம் தண்ணீர் கேட்க கை நீட்டாமல்
தானே தலையில் அடித்துக் கொண்டு
தனியே ஒதுங்கும் பயம்கொண்ட தொழிலாளி
இத்தனைக்கும் மத்தியில்
ஆங்கேஒரு சங்கத்தை உருவாக்கி
கொடியேற்றி தலைநிமிரும் தொழிலாளர்..
அவர் போராட்ட அழகில்
மே நாள் சிலிர்க்கும்!
உயிரைக்கொடுத்துப் போராடி
மேநாள் தியாகிகள் பெற்றுக்கொடுத்த உரிமைகளை
ஒவ்வொன்றாய் இழப்பது
நம் வாழ்நாளின் கேவலம்.
உழைப்பை கூலிக்கு விற்பதையே
எதிர்த்தவர்கள் அவர்கள் இன்றோ
உணர்ச்சியையும் கூலிக்கு விற்கத் தயார்,
உலகமயச் சுரண்டலுக்கும் இணங்கத் தயார்.
இருப்பவர்களின் காட்சிகளைப் பார்த்து
இறந்தவர் கனவு அஞ்சுகிறது!
மேநாளின் இலக்கு,
எட்டுமணிநேர வேலை மட்டுமல்ல,
முதலாளித்துவத்தையே எடுத்தெறியும் வேலை.
மேநாளின் சிறப்பு,
நம்மை முதலாளித்துவ சிந்தனையிலிருந்து
விடுவித்துக் கொள்வதுதான்
செய்! மேநாள் சிலிர்க்கும்


Thursday, April 26, 2018


JE(TTA) இலாக்காத் தேர்வு முடிவுகள்


28/01/2018 அன்று நடைபெற்ற  JE(TTA) இலாக்காத்தேர்வு முடிவுகள் 23/04/2018  CORPORATE அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அகில இந்தியா முழுவதும் 9145 காலியிடங்கள் இருந்தன.
ஆனால் நாடு முழுக்க 95 தோழர்கள்
மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள்

  1. M.செல்வகுமார் - OC
  2. விஜயகுமார் துரைசாமி -OBC
  3. AS.குருபிரசாத் - OBC
  4. S.ஜூலி - SC
  5. D.சுரேஷ்குமார் - SC
  6. P.சந்திரன் - ST

வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.


BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 

தெருமுனைப் போராட்டம்



24/04/2018 அன்று BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

NFTE பொதுச்செயலர்

தோழர். C.சிங் அவர்கள்

தலைமையில் டெல்லியில் கூடியது.



கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


செல்கோபுரம் துணை நிறுவனம் எதிர்த்தும்

மத்திய அரசின் BSNL விரோதக் கொள்கை எதிர்த்தும்

07/05/2018 முதல் 11/05/2018 வரை ஐந்து நாட்கள்

நாடு தழுவிய தெருமுனைப் பரப்புரைகள்

11/05/2018 அன்று

நாடு தழுவிய  கண்டன ஆர்ப்பாட்டங்கள்

துணை நிறுவனம் நிறுத்தக்கோரி

பிரதம மந்திரிக்கு தொலைஅச்சு கோரிக்கை மனு….

Friday, April 13, 2018

ஏப்ரல் - 14 

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் 

Tuesday, April 10, 2018



ஆர்ப்பாட்டம்

   வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்திற்கு எதிரான 
உச்சநீதிமன்றக்கருத்துக்கு எதிராக
மதுரை PGM  அலுவலத்தில்
இன்று மதியம் 1.00 மணியளவில்  
 BSNL  அனைத்து தொழிற்சங்கங்கள் 
ஆர்ப்பாட்டம்.

Sunday, April 08, 2018


நேர்மையின் சிகரம் 
தோழர் .ஓம் பிரகாஷ் குப்தா 
பிறந்த தினம் 
ஏப்ரல் -8


தொழிலாளர் மீது பாசம் மிகுந்தவன்.... 
தொழிலாளர் உள்ளத்தையும் உணர்வையும்  புரிந்தவன்..... 
தொலைநோக்குப் பார்வை கொண்டவன் ......
புகழ்ச்சி விரும்பாதவன் .......
வஞ்சிபுகழ்ச்சி செய்யாதவன்....... 
உன்னை போல் இனியாரும் இங்குகில்லை ......
 குப்தா புகழ் ஓங்குக!....... 

Thursday, April 05, 2018


ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி
VDA 01/04/2018 முதல்
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.


UNSKILLED

பிரிவு நகரம் – ரூ. 17= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.536லிருந்து ரூ.553/= ஆக  உயர்வு.

பிரிவு நகரம் – ரூ. 14= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.448/=லிருந்து ரூ.462/= ஆக  உயர்வு.

பிரிவு நகரம் – ரூ. 11= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.359/=லிருந்து ரூ.370/= ஆக  உயர்வு.


01/04/2018 முதல்
UNSKILLED 
 நாள் கூலி


01/04/2018 முதல்
 SEMI SKILLED
 நாள் கூலி


01/04/2018 முதல்
 SKILLED 
நாள் கூலி



பிரிவு நகரம் ரூ.553/=
பிரிவு நகரம் ரூ.462/=
பிரிவு நகரம் ரூ.370/=



பிரிவு நகரம் ரூ.612/=
பிரிவு நகரம் ரூ.522/=
பிரிவு நகரம் ரூ.433/=



பிரிவு நகரம் ரூ.673/=
பிரிவு நகரம் ரூ.612/=
பிரிவு நகரம் ரூ.522/=