Total Pageviews

Thursday, December 12, 2019



நிதி ஒதுக்கீடு

        BHARAT  NET –II  திட்டச் செலவுகளுக்காக 1500 கோடி ரூபாயை 

BSNL மற்றும் BBNL நிறுவனங்களுக்கு DOT ஒதுக்கியுள்ளதாக 

பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன. 


                  BSNLக்கு 750 கோடியும் BBNLக்கு 750 கோடியும்  USO 

நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.  இரண்டு நிறுவனங்களின் 

பணியிலும் ஈடுபட்ட குத்தகைக்காரர்களுக்கு பலகோடி ரூபாய் 

பில்கள் பாக்கி இருந்தன
       

         குத்தகைக்காரர்கள்  DOT அதிகாரிகளைச் சந்தித்து 

தங்களது பிரச்சினையை எடுத்துக்கூறியதன் அடிப்படையில் 

மேற்கண்ட நிதி ஒதுக்கீடு நடந்துள்ளதாக செய்திகள் 

வெளியாகியுள்ளன. 


       மேலும் 3300 கோடி ரூபாய் வங்கிக்கடனும் இம்மாதம் BSNL 

நிறுவனத்திற்கு கிடைக்கும் எனவும் செய்திகள் கூறுகின்றன. 

எனவே டிசம்பர் மாதம் அனைத்துப் பில்களும், நிலுவைகளும் 

பட்டுவாடா செய்யப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 


       ஊழியர்கள்  VRSல் செல்வதால் ஆண்டிற்கு 7000 கோடி 

செலவு குறையும் எனவும்,BSNLன் நிதிநிலை விரைவில் மேம்படும் 

எனவும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment