Total Pageviews

Monday, October 02, 2017


அக்டோபர் -02 

காந்தி ஜெயந்தி 




அக்டோபர் -01
18 வது BSNL  உதய தினம்






 நமது BSNL நிறுவனம்  பல தலைமுறை காண ஊழியர்கள் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவோம் ஒன்றுபடுவோம் வென்றிடுவோம்.  

Wednesday, September 27, 2017

      மாவட்ட செயற்குழு 
மற்றும் 
வத்தலகுண்டுகிளை, நிலக்கோட்டை கிளை,
 இணைந்த கிளை மாநாடு







நமது மாவட்ட செயற்குழு மற்றும் வத்தலகுண்டு கிளை மாநாடு, வத்தலகுண்டு துரை புஷ்பம் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.  
மாவட்டசெயலர், தலைவர் மற்றும் மாவட்டசங்க, மாநிலசங்க நிர்வாகிகளின் அனல்பறக்கும் விவாதம்,             தோழர். அசோகராஜன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், மதுரை  மாவட்டத்தின் பிரச்சனைகளையும் ஏனைய  பிரச்சனைகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார். தோழர். நடராஜன் மாநிலசெயலர், தனக்கே உரித்தான பாணியில் சிறப்புரையாற்றினார்.

வத்தலகுண்டு கிளை மாநாட்டில் வத்தலகுண்டு கிளை செயலராக தோழர்.கணேசன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
சிறப்பான விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்த   வத்தலகுண்டு தோழர்களுக்கு நன்றி.
  

அகில இந்தியச்செய்தி 

3வது சம்பள மாற்றம், டவர் கம்பெனி தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துச்சங்கங்களின் செயலர்கள் கூட்டம் என்.எப்.பி.டி சங்க அலுவலகத்தில் 26.09.17 அன்று டெல்லியில் நடைபெற்றது. ஒருமித்த கருத்து எட்டப்படாததால் மீண்டும் 04.10.17 அன்று கூடுவதென முடிவு செய்யப்பட்டது.  

Tuesday, September 26, 2017

மாவட்டசெயற்குழு 

வத்தலகுண்டு 
துரை புஷ்பம் திருமண மண்டபம் ( அரசு மருத்துவமனை அருகில்) 
26.09.2017 செவ்வாய் கிழமை 
காலை 10 மணி 
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு செழுமை சேர்க்கவும்

Friday, September 22, 2017

CSC- தனியார்மயம்  

வாடிக்கையாளர் சேவை மையங்களை தனியார்மயமாக்குவதை குறித்த கொள்கை முடிவினை ஓர் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் பேசி அந்தசங்கமும் தனியார்மயத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அதனுடைய இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. 
இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது . தனியார்மய முடிவினை கைவிட வலியுறுத்தி சி.எம்.டி அவர்களுக்கு பொதுச்செயலர் தோழர் சந்தேஷ்வர் சிங் கடிதம் கொடுத்துள்ளார். 
'பெரிய' அங்கீகாரசங்கத்தின் தூரோகச்செயலை முறியடிப்போம்.