Total Pageviews

Monday, July 20, 2015

‘0’வை அழுத்தினால் கேஸ் 

மானியம் குளோஸ் 


செல்போன் மற்றும் தரைவழி போன்களில் இருந்து தானியங்கி 
முறையில்கேஸ்சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறை 
தற்போது அமலில் இருந்துவருகிறது.முன்பதிவு செய்வதற்கான 
எண்ணுக்கு பேசும்போது அதில் வரும்தகவல்களுக்கு ஏற்ப பட்டனை 
அழுத்தி கேஸ் சிலிண்டரை பெறுகிறோம்.  வழக்கமாக புக்கிங் சேவை போன் இணைப்பு கிடைத்தவுடன் கியாஸ் 
முன்பதிவுசெய்ய 
எண்.1 அழுத்தவும் என்ற தகவல் முதலில் வரும்நாம் எண்.1அழுத்தினால் கேஸ் பதிவு எண் சொல்லப்பட்டு நமது மொபைலுக்கு அந்த எண்
எஸ்.எம்.எஸ்மூலம் வரும்அதன் பிறகு சில நாட்களில் நமது வீட்டுக்கு கியாஸ்சிலிண்டர் அனுப்பப்படும்கேஸ் சிலிண்டர் சப்ளை ஆனதும் 
அதற்கான மானியத்தொகை நமது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த நிலையில், “ஏழைகளுக்காக கேஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்என்று ஏழை மக்களின் செல்போன்களுக்கே மத்திய அரசு குறுஞ்செய்தி 
அனுப்பிக் கொண்டிருக்கிறதுஇந்த நிலையில்கேஸ் மானியத்தை 
விட்டுக்கொடுப்பவர்களுக்கு’ வசதியாக முன் பதிவு செய்யும் போதே
 மானியத்தை ரத்துசெய்வதற்கான நடைமுறையை எண்ணெய் 
நிறுவனங்கள் அமல்படுத்தி யுள்ளனஅதன்படிகைபேசியிலோ அல்லதுதரைவழி போனிலோ கேஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும்போது 
ஜீரோ பட்டனை அழுத்தினாலே கேஸ் மானியம்ரத்தாகி விடும்.
முன்பெல்லாம் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்ய 
எண்.1 அழுத்துங்கள்என்றதகவல் முதலில் வரும்அதன்படி 
வாடிக்கையாளர்களும் சவுகரியமாக எண்.1 அழுத்தி சிலிண்டரை 
முன்பதிவுசெய்தார்கள்ஆனால் தற்போது முன்பதிவு செய்யும்போது 
முதலில்கேஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க ஜீரோவைஅழுத்தவும்
என்று வருகிறதுஅதன் பிறகுதான் சிலிண்டர் முன்பதிவுக்கு எண்.1 
அழுத்தவும் என்று வருகிறது.இந்தநடைமுறையைப் பற்றி தெரியாதவர்கள் மற்றும் போன் பயன்பாட்டை பற்றி முழுமையாக அறியாத
பொதுமக்கள் தவறுதலாக ஜீரோவை அழுத்தினாலும் மானியம் ரத்தாகும் அபாயம் உள்ளது.ஜீரோவைதவறுதலாக அழுத்திய பிறகு அதை திருத்திக் கொள்ள போனில் வாய்ப்பு இல்லைபின்னர்மீண்டும்மானியத்தை 
பெற வேண்டும் என்றால் கேஸ் ஏஜென்சி யைத்தான் அணுக வேண்டும்இந்த நடைமுறையால்கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 
நடைமுறை சிக்கல்களை சந்திக்கஅதிக வாய்ப்பு உள்ளது.
எனவே சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது மானியம் ரத்து குறித்த
 விவரத்தை உடனடியாக நீக்க வேண்டும்என்று வாடிக்கையாளர்கள் 
கோரிக்கை வைத்துள்ளனர்.கேஸ் மானியத்தை ஒட்டுமொத்தமாக 
ஒழிப்பது எனமோடி அரசு தீர்மானித்துவிட்டதுஅதையே படிப்படியாக 
அமலாக்கி வருகிறதுஎன்பதை இதுஉறுதிப்படுத்துகிறது.

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment