Total Pageviews

Sunday, February 25, 2018

கூட்டமைப்பு (AUAB) தலைவர்கள்  அமைச்சருடன் பேச்சுவார்த்தை  

                 
   23.02.18 பேரணியின் போது இலாக்கா (DOT) செயலருடன் 
நடந்த பேச்சு வார்த்தையின்  தொடர்ச்சியாக 24.02.18 அன்று
 அமைச்சர்  மாண்புமிகு மனோஜ்  சின்ஹா  அவர்களுடன் 
 பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இலாகா செயலர், சிறப்பு செயலர், CMD BSNL, இயக்குனர்
(மனித வளம்) மற்றும் அமைச்சரின் OSD ஆகியோருடன்
கூட்டமைப்பு  சார்பாக:
தோழர்கள்  அபிமன்யு,  BSNLEU,
 சந்தேஸ்வர்சிங்,  NFTE,
செபாஸ்டின்,  SNEA,
பிரகலாத் ராய்,  AIBSNLEA,
செயப்பிரகாஷ்,  FNTO,
 ராம்,  SEWA BSNL,
ரவி வர்மா ,AIGETOA,
மல்லிகார்ஜூன், BSNL MS
சர்மாBSNL ATM  
ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

3வது  சம்பளமாற்றம்
தொலைதொடர்பு இலாகா தொடர்ந்து சம்பள மாற்றத்தை மறுத்து 
வந்தது. சம்பள பேச்சுவார்த்தையை  தொடங்கிடவும்
பொதுத்துறை இலாகா (DPE )மற்றும் அமைச்சரவை ஒப்புதலை 
பெற்றிடவும்  நடவடிக்கை எடுக்கப்படும்.

துணை  கோபுர ( டவர் ) நிறுவனம்
அமைச்சரின் பதில் திருப்திகரமாக இல்லை. துணை  கோபுர
 ( டவர் ) நிறுவனத்தை திரும்பப்பெற  தேவையான  வழி  வகைகளை  கண்டறிந்து  முயற்சிக்கப்படும்.

ஓய்வூதிய  மாற்றம்
ஓய்வூதிய  மாற்றம் செய்திட தேவையான
நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வூதிய  பங்களிப்பு
அதிகபட்ச  ஊதிய அடிப்படைக்கு (  maximum pay ) பதிலாகDoPT ன்  2006ம்  ஆண்டு  உத்தரவின்  அடிப்படையில்  நடப்புச் சம்பளத்தின்  ( actual pay ) படி கணக்கிட தேவையான  நடவடிக்கையை  இலாகா  செயலர்  ( DOT ) எடுப்பார்.



4G சேவை  வழங்குதல்
உரிய  நடவடிக்கை எடுத்திட உறுதியளித்துள்ளார்.

2வது  சம்பளமாற்ற  குளறுபடிகள்
சரிசெய்திட தேவையான  நடவடிக்கையை  இலாகா  செயலர்
 ( DOT ) எடுப்பார்.

இன்றைய  சந்திப்பின்  தொடர்ச்சியாக  அமைச்சரையும்

இலாகா  செயலரையும்  கூட்டமைப்பு  தலைவர்கள் மீண்டும் 

சந்தித்து  பேசவுள்ளனர் .


ஒற்றுமைக்கு கிடைத்த பலன்;   

                  விழிப்பாய்  இருபோம் ;

                                 வென்றிடுவோம்.





No comments:

Post a Comment