Total Pageviews

Thursday, October 24, 2019



             நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய 

அமைச்சரவை 23/10/2019 அன்று BSNL மற்றும் MTNL 

நிறுவனங்களின் புத்தாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் 

அளித்துள்ளது.

            இந்திய தேசத்தின் மாபெரும் மக்கள் 

சொத்தாகிய BSNL நிறுவனத்திற்கு வழி பிறந்துள்ளது. 

ஒளி பிறந்துள்ளது.


அமைச்சரைவையின் ஐந்து முடிவுகள்.

           BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு 

உடனடியாக 4G அலைக்கற்றை வழங்கப்படுகின்றது. 

செலவுத்தொகை ரூ.20,140/-கோடி அரசின் நிதியில் 

இருந்து ஒதுக்கப்படுகின்றது. GST வரித்தொகையான 

ரூ.3674/= கோடியும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படும். 4G 

அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் BSNL மற்றும் MTNL 

நிறுவனங்கள் களத்தில் போட்டியாளர்களைச் சந்திக்க 

முடியும். கிராமப்புற பகுதிகள் உள்ளிட்டு தேசம் 

முழுமையும் தரமான சேவையைத் தரமுடியும்.


நிர்வாகச்செலவுகளுக்காகவும், 

முதலீட்டுச்செலவுகளுக்காகவும் தங்களது பழைய 

கடன்களைத் தீர்த்துக்கொள்வதற்கும் ரூ.15,000/- 

கோடியளவில் மத்திய அரசின் உத்திரவாதம் பெற்ற 

நீண்டகால பத்திரங்கள் மூலம் நிதி 

திரட்டிக்கொள்ளலாம்.


நிர்வாகச்செலவுகளைக் குறைப்பதற்காக 50 வயதிற்கு 

மேற்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத்திட்டத்தைத் 

தயாரித்து அறிவிக்கலாம். இதற்காக ஆகும் 

செலவினமான ரூ.17,169 கோடியையும் ஓய்வூதியம், 

பணிக்கொடை மற்றும் COMMUTATION போன்ற 

செலவினங்களையும்  அரசு ஏற்றுக்கொள்ளும். விருப்ப 

ஓய்வுத்திட்ட அம்சங்களும், நடைமுறைகளும் 

மேற்கண்ட நிறுவனங்களால் முடிவு செய்யப்படும்.


தங்களது வளர்ச்சிப்பணிகளுக்கான செலவுகள் மற்றும் 

ஊழியர் ஓய்வுக்கால செலவுகளுக்காக BSNL மற்றும் 

MTNL நிறுவனங்கள் தங்களது அசையாச்சொத்துக்களை 

பணமாக்கிக்கொள்ளலாம்.


BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் இணைப்பு 

கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.


மேற்கண்ட புத்தாக்கத் திட்டத்தின் மூலம் BSNL 

மற்றும் MTNL நிறுவனங்கள் தரமான நம்பகமான 

தங்களது சேவையை தேசம் முழுவதும்... தேசத்தின் 

மூலைமுடுக்குகள் தோறும் வழங்கிட வகை 

செய்யப்படுகின்றது.

No comments:

Post a Comment