Total Pageviews

Friday, November 20, 2015


மத்திய அரசு ஊழியர்களுக்கு 

23.55% ஊதிய உயர்வு...

7-வது ஊதியக் குழு பரிந்துரை...




மத்திய அரசு மற்றும் 
ஓய்வூதியதாரர்களுக்கு ஊதிய 
விகிதங்களை மாற்றி அமைப்பதற்காக 
கடந்த ஆண்டு பிப்ரவரி 
மாதம் முன்னாள் பாரத பிரதமர் 
உயர்திரு. மன்மோகன் சிங்
ஆட்சிக்காலத்தில் நீதிபதி 
ஏ.கே. மாத்தூர் தலைமையில்
7-வது ஊதியக்குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையில்... 7-வது ஊதியக்குழு தனது 
900 பக்க அறிக்கையை 19-11-2015
 அன்று மத்திய
அரசிடம் தாக்கல் செய்தது.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளில்... சில முக்கிய அம்சங்கள்:

  • 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 01-01-2016 முதல் அமுல் படுத்தப்படும். 
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% சதவீத ஊதிய உயர்வு   (ஊதியம்: 16% சதவீதம் - இதர படிகள்: 63% சதவீதம்)
  • ஓய்வூதியர்களுக்கு 24% சதவீத ஓய்வூதிய உயர்வு.
  • குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18,000/- (தற்போது ரூ. 7000/-)
  • அதிக பட்ச ஊதியம் ரூ. 2,50,000/- (தற்போது ரூ. 90,000/-)
  • தர ஊதியம் (Grade Pay) ரத்து.
  • குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9000/- (தற்போது ரூ. 3500/-)
  • புதிய ஊதியம் பொருத்துவதற்கான கணக்கீடு முறை: (தற்போதைய ஊதியம் + தர ஊதியம் (7-வது ஊதியக்குழுவில் ரத்து செய்யப்பட்டுள்ளது) X 2.57)
  • ஆண்டு உயர்வுத் தொகை 3% சதவீதம் (மாற்றம் இல்லை)
  • ஏற்கனவே அமுலில் இருந்த 196 படிகளில் 52 படிகள் ரத்து செய்யப்படும். மேலும் 36 படிகள் தற்போதைய அல்லது புதிய படிகளுடன் இணைக்கப்படும்.
  • பதவி உயர்வுக்கான ஊதியம் பொருத்துதலில் (Fixation on Promotion) எந்த வித மாற்றமும் இல்லை. 
  • வீட்டு வாடகைப்படி X,Y,Z நகரங்கள் முறையே 24%, 16%, 8% எனவும் கிராக்கிப்படி 50% உயர்ந்தால் 27%, 18%, 9% எனவும் கிராக்கிப்படி 100% உயர்ந்தால் 30%, 20%, 10% எனவும் மாற்றப்பட்டுள்ளது.
  • கிராக்கிப்படி (Dearness Allowance) Formula-வில் எந்தவித மாற்றமும் இல்லை.
  • போக்குவரத்துப்படி A, A1 நகரங்களுக்கு NE-1 & NE-2, NE-3 to NE-8, NE-9 & above முறையே ரூ. 1350/-, 3600/-, 7200/- மற்ற நகரங்களுக்கு NE-1 & NE-2, NE-3 to NE-8, NE-9 & above முறையே ரூ. 900/-, 1800/-, 3600/- என மாற்றப்பட்டுள்ளது.
  • தற்காலிக விடுப்பு (Casual Leave)-இல் எந்தவித மாற்றமும் இல்லை.
  • குழந்தை பராமரிப்பு விடுப்பு, (CCL) எடுக்கும் பெண் ஊழியர்களுக்கு முதல் குழந்தைக்கு 100% முழு ஊதியமும், 2-வது குழந்தைக்கு 80% ஊதியமும் வழங்கப்படும்.
  • மகப்பேறு விடுப்பில் (Maternity Leave) எந்தவித மாற்றமும் இல்லை.
  • LTC மற்றும் Leave Encashment-இல் எந்தவித மாற்றமும் இல்லை.
  • ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.
  • குடும்பக் கட்டுப்பாடு படி (Family Planning Allowance) ரத்து.
  • ஓய்வூதியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி (FMA) மாதம் ரூ. 500/- வழங்கப்படும்.
  • குழுக் காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீட்டு முறையே 15 லட்சம் (மாதம் ரூ.1500/-), 25 லட்சம் (மாதம் ரூ.2500/-), 50 லட்சம் (மாதம் ரூ.5000/-) என உயர்த்தப்பட்டுள்ளது.
  • வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் ரத்து செய்யப்படும்.
  • பணிக்கொடை உச்சவரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்வு. அத்துடன் அகவிலைப்படி 50% சதவீதம் உயருகின்ற பொழுது பணிக்கொடை உச்சவரம்பு 25% சதவீதம் உயரும்.        
  • வட்டியுடன் கூடிய வீட்டுக்கடன் ரூ. 7.50 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்வு.
இந்த ஊதிய உயர்வால் 47 லட்சம் 
மத்திய அரசு ஊழியர்களும், 
52 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் அடைவார்கள்.

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர்(பொறுப்பு) 

No comments:

Post a Comment