Total Pageviews

Thursday, December 10, 2015

           BSNL அதிகாரிகள் ஊழியர் சங்கங்களின்
        
                கூட்டமைப்புதமிழ் மாநிலம்


தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் நமது BSNL நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைக்காண 09-12-2015 அன்று சென்னை வந்திருந்த நமது BSNL சேர்மன் திரு.அனுபம்ஸ்ரீவத்சவா அவர்களை தமிழ்மாநில அதிகாரிகள் / ஊழியர்கள் சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கொடுத்த கடிதத்தின் தமிழாக்கம்.

BSNL அதிகாரிகள் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புதமிழ் மாநிலம்
 09—12—2015

பெறுநர்
சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர்,
BSNL புதுடெல்லி.

மரியாதைக்குரிய ஐயா,
பொருள்:        தமிழக மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் BSNL  சேவையை  மீண்டும்புனரமைத்தல் --  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
BSNL ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குதல் --- தொடர்பாக
•••    •••    •••
                ஐயாதமிழகத்தின் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளையும் சென்னைநகரையும் நீங்களே நேரடியாகப் பார்வையிட வருகை தந்துள்ளதை மிகுந்தமரியாதையோடு பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.  BSNL  சந்தாதாரர்களுக்குசிறந்த தொலைத் தொடர்பு சேவையை அளிப்பதில் நீங்கள் காட்டும்உண்மையான முயற்சிகளுக்காகதமிழகத்தின் BSNL  சந்தாதாரர்கள் சார்பிலும்ஊழியர்கள் சார்பிலும் நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்.  இது தொடர்பாக சிலகருத்துகளை உங்களுடைய தகவலுக்காகவும்  மேலான பரிசீலனைக்கும்முன்வைக்கிறோம்.
        அனைத்திற்கும் மேலாக இந்த உறுதியை முதலில் நாங்கள் தருகிறோம்தமிழக BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் BSNL  சேவையை மேம்படுத்துவதில்கடுமையாக உழைத்து வருவது மட்டுமல்லBSNL கம்பெனியை ஒரு லாபம்ஈட்டும் நிறுவனமாக நிச்சயம் மாற்றிக் காட்டுவோம் எனவும் உறுதி தருகிறோம்.தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் BSNL சேவையை புனரமைப்புசெய்வதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஓய்வின்றிகுறிப்பாககடலூர்,வேலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில்கடுமையாகப் பணியாற்றிவருகின்றனர்.  பாதிப்படைந்த பகுதிகளில் மேலும் அர்ப்பணிப்போடு பணியாற்றி,சந்தாதாரர்கள் மகிழும் சேவையை அளிப்போம் எனவும் நாங்கள் உறுதிகூறுகிறோம்.
1.                    தங்களின் மேலான அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையானஸ்டோர் தளவாடப்பொருள்களையும் தேவையான நிதியையும் ஒதுக்கிடு செய்யவேண்டுகிறோம்.
2.                   தமிழகத்தின் சில பகுதிகளில் NGN சேவை வழங்கப்பட்டுவருகிறது;அதுநல்ல பயனையும் தந்து வருவதைக் காண்கிறோம்எனவே ஐயா அவர்கள்NGN சேவையை தமிழகம் முழுவதும் விஸ்தரிக்க தகுந்த முன்முயற்சிகளையும்ஏற்பாடுகளையும் செய்து தருமாறு வேண்டுகிறோம்.
3.                   லீ்ஸ்டு லைன், இன்டர்நெட் இணைப்புகளின் BSNL கட்டண விகிதம்மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.  இந்த கட்டணம்குறைக்கப்பட்டால் இந்த சேவையில் நம்மால் மேலும் சந்தாதாரர்களை ஈர்க்கமுடியும்.
4.                  சமீபத்தில் நேசம் கோல்டு மொபைல் திட்டத்தில் எப்போதும் ரூ200/= முழு டாக் மதிப்பு பெறும் சலுகை திரும்பப் பெறப்பட்டுள்ளதுசந்தாதாரர்களை மிகவும் கவர்ந்த திட்டமாக இது விளங்கியது.  எனவே  மீண்டும்அந்த சலுகை அமல்படுத்தப்பட வேண்டும்.
5.                   ரூ110 வவுச்சர் பெருமளவில் வாடிக்கையாளர் சேவைமையங்களிலும் முகவர்களிடமும் இருப்பு உள்ளது.  இதன் வேலிடிட்டி இம்மாதஇறுதியில் முடிய உள்ளது,  எனவே ரூ110 வவுச்சர்களின் வேலிடிட்டி தேதிநீட்டிக்கப்பட வேண்டும்.

மேற்கண்டவைகளோடு ஊழியர் பிரச்சனைகள் சிலவற்றையும் தாங்கள் பரிசீலிக்கவேண்டுகிறோம்.

6.    சமீபத்திய கடும் மழை வெள்ளத்தில் பொது மக்களோடு BSNLஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.  எனவே BSNL நிர்வாகம்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் நிவாரண உதவி வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
7.    தமிழக தொலைத் தொடர்பு வட்டத்தில்மழை வெள்ளத்தில்பாதிக்கப்பட்ட பகுதிகளின் BSNL ஊழியர்களுக்குவெள்ள பாதிப்பு முன்பணம்(அட்வான்ஸ் குறைந்த பட்சம் ரூ.25,000/=) வழங்கிட BSNL நிர்வாகம் தேவையானநிதியை விடுவிக்க வேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகிறோம்.
8.    ஊழியர்களின் உடைமைகள்மோட்டார் வாகனங்கள்கம்ப்யூட்டர்,குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் மதிப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்கள்முதலிய பலவும்மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கடும்இழப்புக்குள்ளாகி உள்ளனர்பல பொருட்கள் உபயோகிக்க முடியாதபடிகடுமையாகச் சேதமாகி உள்ளன.  இதனால் முக்கியமாக தேவையானவற்றைவாங்கவும் பழுது நீக்கம் செய்துகொள்ளவும் ஊழியர்கள்  GPF முன்பணம்கோரலாம்.  எனவே நிர்வாகம் GPF முன்பணம் / திரும்ப எடுத்தல்கோரிக்கைகளை நிபந்தனை வரம்பு ஏதுமின்றி அனுமதிப்பது மட்டுமல்லாது GPFமுன்பணம் தாமதமின்றி பெற போதுமான நிதியை உடனே தமிழக வட்டத்திற்குவழங்க வேண்டும்.
9.    சில ஊழியர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் (டிவி,வாஷிங் மெஷின்,மிக்ஸிகிரைண்டர்கட்டில் பீரோ முதலிய பல பலஉடைமைகளையும் ) முற்றாக இழந்து தவிக்கின்றனர்.  எனவே அத்தகையஊழியர்களுக்கு மட்டும் வட்டி இல்லாத முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம்வழங்கிட வேண்டுகிறோம்,
10.  சென்னையின் பலபகுதிகள் மற்றும் கடலூர் SSA விலும் மழைவெள்ளத்தால் போக்குவரத்து சேவை மிகக் கடுமையாக பாதிப்படைந்தது.  பலபகுதிகளில் போக்குவரத்து வசதி முற்றாக , குறிப்பாக டிசம்பர் 1 முதல் 5வரைதடைப்பட்டிருந்தது.  பல ஊழியர்களின் வசிப்பிடங்கள் முற்றாக நீரால்சூழப்பட்டு யாரும் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது,  இதனால் பலஊழியர்களால் பணிக்கு வரமுடியாத சூழல்இந்நிலையிலும் தயக்கமின்றிபணிக்கு வந்து கடமையாற்றிய மற்றவர்கள் பாராட்டப்பட வேண்டும்.வரமுடியாதவர்களுக்கு DP & AR OM No.28016/1/79 – Estt (A) தேதி 28-05-1979உத்தரவுபடி தேவையான சிறப்பு விடுப்பினை தயவு செய்து வழங்கிடவும்கேட்டுக்கொள்கிறோம்,
                               நன்றியுடன்,
                            
                    தங்கள் உண்மையுள்ள 
 
S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )  

No comments:

Post a Comment