Total Pageviews

Thursday, April 11, 2019


1.        01.04.2018 தேதிக்குப் பிறகு உருவாகியுள்ள காலியிப்பணியிடங்களுக்கு  கருணை அடிப்படையிலான  பணிநியமனத்தை நிதிச் சுமையின் காரணமாக 3 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாக BSNL இயக்குநர் குழு முடிவெடுத்துள்ளது.

2.      BSNLEU சங்கம் தனியாக நாடுமுழுக்க 13/04/2019 முதல் 30/04/2019 வரை “SAVE BSNL SAVE NATION”  என்ற பிரச்சாரப் பரப்புரை செய்ய முடிவெடுத்துள்ளது. AUAB கூட்டமைப்பிடம் ஆதரவு கேட்டுள்ளது. 

3.      18/04/2019 வியாழன்று தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழக BSNL நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் ஏகப்பட்ட விடுமுறைகள்.

4.      ஆறு மாதங்களுக்கு மேலாக எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணிக்கு வராமல் பாழாய்ப்போய்க் கொண்டிருக்கும் ஊழியர்கள் மேல் 15/04/2019க்குள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டெல்லித் தலைமையகம் உத்திரவிட்டுள்ளது.

5.      மக்கள் சொத்தாம் BSNL நிறுவனத்தை அழித்தொழிக்க நினைக்கும் மத்திய அரசின் பொதுத்துறை விரோதப்போக்கைக் கண்டித்து AITUC மத்திய சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. AITUC அறிக்கைகளோடு நின்றுவிடாமல் ஆவண செய்திட வேண்டும்.

6.      BBNL  க்கு BSNL லிருந்து Deputation  லில் அதிகாரிகள் விரைவில் அனுப்பபட உள்ளனர். Director HR BSNL &Director Operation BBNL இருவரும் சந்தித்து பேசி முடிவு எடுத்ததன் அடிப்படையில் BBNL க்கு தேவையான Technical officers (JTO, SDE ) ம் Accounts அதிகாரிகள்(AO, JAO) BSNL லிருந்து Deputation ல் அனுப்பபட உள்ளனர்.  விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.. Option list அனுப்புவதற்கு இறுதி நாள் 11/04/2019.

7.      01/04/2019 முதல் IDA 2.6 சதம் உயர்ந்து 141.4 சதத்தை எட்டியுள்ளது. இதற்கான DPE உத்திரவு 02/04/2019 அன்று வெளியாகியுள்ளது. 

IDA மட்டுமே BSNL ஊழியர்களின் ஒரே ஆறுதல்.


No comments:

Post a Comment