Total Pageviews

Tuesday, May 28, 2019



                  8வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் உத்தேசமாக 
2019  செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் அதற்கான அறிவிப்பு ஜூன் அன்று வெளியாகும் என்றும் 27/05/2019 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. தற்போதுள்ள தேர்தல் விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாத சூழலில் பழைய விதிகளின்படியே தேர்தல் நடைபெறுமாஎன்ற கேள்வி எழுகின்றது.

*******
        வணிகப்பகுதி இணைப்பில் இணைக்கப்படும் மாவட்டத்தின் மாவட்டச்சங்கம் அப்படியே நீடிக்க வேண்டும் எனவும்… JCM தலமட்டக்குழு தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் BSNLEU சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நடைபெறவுள்ள 8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் SSA அளவில் நடைபெறுமாஅல்லது வணிகப்பகுதி அளவில் நடைபெறுமாஎன்பதைப் பொறுத்தே சங்கங்களின் அமைப்புக்கள் நீடிக்க முடியும் என்று  தோன்றுகிறது.
**********

              ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆகக்குறைக்க அரசுக்கு DOT பரிந்துரை செய்ய உள்ளதாக பல்வேறு செய்திகள் உலா வந்தன. இத்தகைய முயற்சி விதிகளுக்கு முரணானது என நமது மத்திய சங்கம் DOT செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.
*************
                      நமது மத்திய சங்க விரிவடைந்த மத்திய செயற்குழு மைசூரில் 08/06/2019 முதல் 10/06/2019 முதல் நடைபெறுகின்றது. அதற்கான சிறப்பு சிறுவிடுப்பு உத்திரவு வெளியாகியுள்ளது.
**********

                 இந்தியாவில் தொடர்ந்து எண்ணிக்கையில் கூடிவந்த செல்போன் சந்தாதாரர்  எண்ணிக்கை மார்ச் மாதம் குறையத்தொடங்கியுள்ளது. 118 கோடியாக இருந்த எண்ணிக்கை 116 கோடியாக குறைந்துள்ளது. வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் செல்போன் சந்தாதாரர் எண்ணிக்கை கோடி அளவிற்கு குறைந்துள்ளது. ஆனாலும் வழக்கம்போல் JIO நிறுவனம் 95 லட்சம் சந்தாதாரர்களை மார்ச் மாதம் கூட்டியுள்ளது.
*********
                போன்மெக்கானிக் இலாக்காத் தேர்வு 08/09/2019 அன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 3207 காலியிடங்கள் உள்ளன. ஆனால் தகுதி உள்ள தோழர்கள் 100 பேர் கூட தமிழகத்தில் தேறமாட்டார்கள். காரணம் கல்வித்தகுதி SSLC என்பது குறைக்கப்படவில்லை.
*********
                   தமிழகத்தில் 04/06/2019 அன்று NFTE சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நாள் நடைபெறுகின்றது.

No comments:

Post a Comment