Total Pageviews

Friday, June 29, 2018


3வது ஊதியதிருத்தப் பேச்சுவார்த்தை குழு

(JOINT WAGE REVISION COMMITTEE)





DPE  வழிகாட்டுதலின்படி… BSNL ஊழியர்களுக்கு

3வது ஊதியதிருத்தப் பேச்சுவார்த்தையை துவக்குவதற்காக

10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.


நிர்வாகத்தரப்பில் உறுப்பினர்களும்

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக

உறுப்பினர்களும் குழுவில் இடம் பெறுவார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தரப்பில்

BSNLEU சார்பாக உறுப்பினர்களும்

NFTE சார்பாக உறுப்பினர்களும்… இடம்  பெறுவார்கள்.


ஊதியத்திருத்தப் பேச்சுவார்த்தை என்ற மிகப்பெரிய நிகழ்வில்

ஊழியர்கள் தரப்பில் வெறும் உறுப்பினர்கள் 

மட்டுமே என்பது ஏற்புடையதல்ல.



முதலாம் ஊதியத்திருத்தத்தில்...

தோழர்.குப்தா அன்று இருந்த அனைத்து

ஒன்பதுதொழிற்சங்கங்களையும் 

பங்கேற்கச்செய்தார்.

இரண்டாவது ஊதியத்திருத்தத்தில்

BSNLEU சார்பாக 11 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


மூன்றாவது ஊதியத்திருத்தம்

DOTல் இருந்து BSNLலில் பணியமர்ந்த ஊழியர்களுக்கு 

கடைசி ஊதியத்திருத்தமாகும்.

ஊழியர்களுக்கு சம்பளத்தில் பல்வேறு குறைகள் உள்ளன.

குறைகளை விட பல்வேறு குளறுபடிகளும்  உள்ளன.



இந்நிலையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட

 சிறிய குழு பெருமளவில் விவாதங்களை

முன்வைக்க இயலாத சூழல் உருவாகும்.

எனவே குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை

தேசிய JCMல் உள்ளது போல்

BSNLEUக்கு 9 உறுப்பினர்

NFTEக்கு 5 உறுப்பினர் எனஉயர்த்தப்பட  வேண்டுமென

BSNLEU சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊதியக்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பங்கேற்பு என்ற நிலையை விடஅனைத்து சங்கங்கள் பங்கேற்பு என்ற நிலையே தற்போதுள்ள சூழலில்  ஊழியர்களுக்கு கூடுதல் பலனளிக்க வல்லது.


எவ்வாறாயினும்

இணைந்த ஊதியக்குழு அமைப்பு என்பது

நமது ஒன்றுபட்ட தொடர் போராட்டத்தின் விளைவாகும்

என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
















No comments:

Post a Comment